2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மட்டு. அபிவிருத்திக்கு ரூ.3,200 மில்லியன் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்  

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு இவ்வாண்டு 3,200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சமூக ஆளுகையை அடைவதை இலக்காகக் கொண்டு கொள்கை வலுப்பெறச் செய்தல் மற்றும் பிரஜைகளின் இடையீட்டினை செயற்படுத்துதல் எனும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கொக்கட்டிச்சோலை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜனதாக்ஸன் மற்றும் கெயார் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் இணைந்து கிழக்கு மாகாணத்திலும் இலங்கையின் ஏனைய மகாணங்களிலும் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த உத்தேசித்துள்ளது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இவ்வாண்டில் மத்திய அரசு, மாகாண சபை, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு, சர்வதேச அரசார்பற்ற மற்றும் தேசிய மட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 3,200 மில்லியன் ரூபா நிதியினைக் கொண்டு இம்மாவட்டத்துக்கான அபிவிருத்தித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தி அதில் வெற்றி காண்பதற்கு அதிகாரிகள், பொதுமக்கள், மற்றும் அரசியல் தலைமைத்துவங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். குறிப்பாக மக்கள் பங்களிப்பில்லாத எந்தத் திட்டமும் வெற்றியடைய வாய்ப்பில்லை. கடந்த கால எமது அனுபவங்களிலிருந்து இது ஒரு கற்றுக்கொண்ட பாடமாக இருக்கின்றது.

இப்பொழுது மேல்மட்டத்திலிருந்து திட்டங்கள் வகுக்கப்படாமல் மக்களின் காலடிக்குச் சென்று அடிமட்டத்திலிருந்து திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பது திட்ட வல்லுநர்களால் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. எனவே, ஜனதாக்ஸன் நிறுவனம் அமுலாக்க உத்தேசித்துள்ள இந்தத் திட்டம் மக்களினதும், அதிகாரிகளினதும் பங்களிப்புடன் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X