2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு.,அம்பாறையில் போக்குவரத்து தடை; படகுசேவை ஆரம்பிக்க திட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக  பெய்து வரும் அடைமழை காரணமாக கல்முனை- நாவிதன்வெளியை இணைக்கும் கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கி வருவதால் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர் சு.கரன் கூறுகையில்,

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக கிட்டங்கி வீதி நீரில் மூழ்கிவருவதால் போக்குவரத்து தடைப்படும் நிலை உருவாகலாம்.

இதற்காக இயந்திரப்படகினை ஒழுங்குசெய்து தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் போக்குவரத்து தடைப்பட்டவுடன் படகுசேவை உடன் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவைளை,மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூலக்காடு, கின்னையடி, முருக்கந்தீவு சாராவளி போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து வெள்ளம் காணரமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் இங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் படகுச் சேவை இடம்பெற்றுவருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X