Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை அம்மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவற்றைத் தடுத்துநிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் ஊர்வலம் செல்லவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனைவருக்கும் உரிமையுள்ளது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தால் செவ்வாய்க்கிழமை (05) தாக்கல் செய்யப்பட்ட மனு புதன்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மட்டக்களப்பு இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், இந்துக்குருமார் ஒன்றியத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.பிரேம்நாத்தும் ஆஜராகி வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றன.
மட்டக்களப்பு நகரில் மங்களராம விகாராதிபதி;யினால் நீதிமன்றத்தின் கட்டளையை மீறி ஆர்ப்பாட்;டம் நடத்தப்பட்டதாகவும் அதற்கு எதிராக பொலிஸார் அச்சந்தர்ப்பத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்; சட்டத்தரணி கே.பிரேம்நாத் சுட்டிக்காட்டினார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடாத்தவோ, ஊர்வலம் நடத்தவோ மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்துக்கு உரிமையுள்ளது என்பதையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, புதன்கிழமையோ (07), வியாழக்கிழமையோ (08) தாம் ஊர்வலத்தையோ ஆர்ப்பாட்டத்தையோ நடத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை என மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago