Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரையில் நடைபெறும் தம்ம போதனை வைபவத்தில் கலந்து கொள்வதுடன் மட்டக்களப்பிலுள்ள ஏனைய மத வழிபாட்டுத் தளங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்றார்.
மேலும்,ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் சனிக்கிழமை (17)மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025