Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 04 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சுகாதாரத்துக்கு முறைக்கேடான முறையில் உணவு விடுதிகளை நடத்திய ஆறு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின்போது சுகாதாரத்தினை பேணும் வகையில் விசேட நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு நகரில் உணவு விடுதிகள் இன்று புதன்கிழமை காலை தொடக்கம் பொதுச்சுகாதார பிரிவிரினால் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மழை காலங்களில் அதிகளவில் மக்கள் உணவுப்பொருட்களைப்பெற்றுக்கொள்வதற்கு ஹோட்டல்களை நாடுவதன் காரணமாக சிறந்த உணவினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையின்போது ஹோட்டல்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுகாதாரம் பேணப்படாத,மனித பாவனைக்கு உகந்த முறையில் வைக்கப்படாத பெருமளவான உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதன்போது உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத ஹோட்டல் உரிமையாளர்கள் ஆறு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக வெட்டுக்காடு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.
இதன்போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்களும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago