Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுள்ளார்.
மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சரும்; மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இப்பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் விஜயம் செய்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் பணிகள் மற்றும் கற்கைநெறிகள் தொடர்பாக கலந்தாலோசித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இவ்வாறான பாரிய முதலீடு கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதை வெகுவாக பாராட்டியதுடன், தனது அமைச்சு இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளித்தார்.
13 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
33 minute ago