Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்
அரச மருத்துவக் கல்வியை தனியார் மயப்படுத்துவதையும் தனியார் மருத்துவத்துறை மாணவர்களை அரச மருத்துவத்துறைக்கு உள்வாங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மற்றும் இலவசக் கல்வியை பாதுகாக்குமாறு கோரியும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு அரசடியிலுள்ள மருத்துவபீட வளாகத்திலிருந்து ஆரம்பமாகி மீண்டும் அம்மருத்துவபீடத்தை அடைந்தது.
'ஆட்சியாளர்களே இலவசக் கல்வியையும் இலவச வைத்திய சேவையையும் அழிக்கும் கல்விக் கடையை மூடு', 'மாலபே எனும் மருத்துவப்பட்டம் விற்கும் கடையை மூடு', 'மாலபேக்கு அரசாங்க வைத்தியசாலைகளை விற்பதை நிறுத்து', 'பல்கலைக்கழக அனுமதியை கூட்டுவோம்' உள்ளிட்டவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் இவர்கள் தாங்கியிருந்தனர்.
இதன் பின்னர் அரசடி மருத்துவ பீடத்துக்கு முன்பாக மாணவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago