2025 மே 26, திங்கட்கிழமை

மட்டு. வைத்தியசாலையின் குழந்தைகள் விடுதியில் தீ

Princiya Dixci   / 2017 மே 16 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் விடுதியில், நேற்று (15) நண்பகல் 12 மணியளவில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.  

குறித்த விடுதியிலுள்ள மின்ஆழித்தொகுதி எரிந்தமையாலேயே, இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார். 

இந்த தீ விபத்தை அடுத்து, விடுதியின் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவர்கள் அனைவரும், பாதுகாப்பான முறையில், அருகிலிருக்கும் விடுதியொன்றுக்கு மாற்றப்பட்டனரெனவும், இதனால், சிறுவர்கள் எவரும் எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும், வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.  

தீ விபத்துக்கு உள்ளான விடுதியின் எரிந்த மின்ஆழித் தொகுதிகளின் திருத்தப் பணிகள் உடனடியாக இடம்பெற்று வருவதாகவும் அதன் பின்னர், அவ்விடுதியின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறுமெனவும் அவர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X