Suganthini Ratnam / 2016 நவம்பர் 24 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்டு 03 மணித்தியாலங்களுக்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகினால் அந்நோயை அவசர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என அவ்வைத்தியசாலையின் விசேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் ரீ.திவாகரன், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வுhசழஅடிழடலளளை வுசநயவஅநவெ எனப்படும் இரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சை முறை மூலம் பாரிசவாத தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்கும் விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறினார்.
முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய பெண் ஒருவர் சில மணி நேரங்களுக்குள்ளேயே சுகப்படுத்தப்பட்டார்.
இதற்கான சேவையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவின் ஒருங்கிணைப்பில் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025