Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சிற்றூழியர்கள், மேற்பார்வையாளர்களின் கடமைக்கு அவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி சிற்றூழியர்களும் மேற்பார்வையாளர்களும் ஒரு மணிநேரம் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இவ்வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வழமைபோன்று இன்று திங்கட்கிழமை கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இவர்களின் அலுவலகத்துக்குள் நுழைந்த அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் இருவர், அவர்களின் வரவுப்; பதிவேட்டை சோதித்துள்ளனர்.
இதனை அடுத்து, வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், பணிப்பகிஷ்கரிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுத் தலைவர் ராஜன் மயில்வாகனம் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் எ.கீர்த்திரட்ண ஆகியோர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடினர். இதனை அடுத்து, நிலைமை சுமூகமாகி சிற்றூழியர்களும் மேற்பார்வையாளர்களும்; கடமைக்குத் திரும்பினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுமார் 600 சிற்றூழியர்களும் மேற்பார்வையாளர்களும்; கடமையாற்றுகின்றனர்.
சிற்றூழியர்கள், மேற்பார்வையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அபிவிருத்திக்குழுத் தலைவர் ராஜன் மயில்வாகனம் தெரிவித்தார்.


2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago