Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுப்பத்திரங்கள் இன்று புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் வேட்புமனுப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் ஆர்;வம் காட்டி வருவதுடன் இளைஞர் கழக ஆதரவாளர்களுடன் பிரதேச செயலகங்களுக்குச் சென்று தமது வேட்புமனுப்பத்திரங்களை பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலாளரினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வேட்புமனுப்பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் அதிகாரிகளிடம் கையளித்தனர்.
இதன்போது,மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.இதில் மட்டக்களப்பு தொகுதியில் 12 வேட்பாளர்களும் கல்குடா தொகுதியில் 12 வேட்பாளர்களும் பட்டிருப்பு தொகுதியில் 8 வேட்பாளர்களும் போட்டிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மட்டக்களப்பு தொகுதியின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 3 வேட்பாளர்களும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 3 வேட்பாளர்களும் வவுணத்தீவு பிரதேச செயலாளர் பிரிவு,காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றில் 2 வேட்பாளர்களும் கல்குடா தேர்தல் தொகுதியின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவு, கிரான் பிரதேச செயலளார் பிரிவு, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு, பட்டிருப்பு தொகுதியின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றில் 2 வேட்பாளர்களும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 4 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago