2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டு.வில் 100.7மில்லி மீற்றர் மழை பதிவு

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,பேரின்பராஜா சபேஷ்,எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயங்களில் 100.7மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மழைக்காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதி, செங்கலடி மத்திய கல்லூரி வளாகம் மற்றும் வீடுகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது.

மழை தொடர்ந்தும் பெய்த வண்ணம் இருப்பதால் ஏறாவூர்ப் பற்று பிரதேசம் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை,நேற்றிரவு முழுவதும் பெய்த அடை மழை காரணமாக மட்டக்களப்பின் தாழ்நிலப்பிரதேசங்களான மாமாங்கம், ஊறணி, சின்ன உப்போடை, பெரிய உப்போடை, கல்லடி உள்ளிட்ட பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை,புதிய காத்தான்குடி தக்வா நகர் மற்றும் புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகர் ஆகிய கிராமங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இங்கு வீடுகளுக்குள் வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு வசித்த பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகரிலுள்ள குறுக்கு வீதியில் பயணிக்க முடியாதவாறு சுமார் 3 அடிக்கு வெள்ள நீர் நிற்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X