Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எஸ்எம்.யாசீம்,வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டுவரும் செயற்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில்நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ஏ.அஸீஸ்,மாகாண உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.றாபி,மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளர் எம்.சலீம், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மாநகர சபைகள்,நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றினால் அந்தந்த உள்ளூராட்சி மன்றப்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இங்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் முறைப்பாடுகள் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இது மழைகாலம் என்பதனால் வடிகான் துப்பரவில்லை என்றும் வீதிகளில் வெளிச்சமில்லாமல் இருள் சூழ்ந்துள்ளது என்றும் சில வீதிகளில் மாணவர்கள் பாடசாலைக்குப் போக முடியாதளவு மழை நீர் நிரம்பிக் காணப்படுவதாகவும் முறைப்படுகள் வந்த வண்ணம் உள்ளன.
எனவே, மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சபைகளாக இருக்கும் சபைகளின் செயலாளர்களாக இருக்கும் நீங்கள் பொது மக்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மக்களின் தேவைகள் முடிந்தளவு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முறைப்பாடுகள் வராதவாறு மக்களின் குறைகளை நிவர்த்திச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூகம் கொடுத்திருந்த செயலாளர்களிடம் கட்டளையிட்டார்.
அது போன்று, இன்று கிழக்கில் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வேலையற்று இருக்கிறார்கள். இவர்களில் சிலர் வருமானமின்றி கஷ்டத்துடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதில் நாம் அதிக அக்கரை செலுத்த வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தைக் கூட்டவேண்டும். அப்போதுதான் உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆளணிகளை நியமிக்க முடியும். ஒவ்வொரு சபைகளிலும் ஏற்பட்டிருக்கும் ஆளணிக் குறைபாட்டை சரி செய்வதன் மூலமும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க முடியும்.
எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் மும்முறமாக செயற்பட நீங்களும் ஆயத்தமாகுங்கள். கிழக்கில் அதிக வேலைவாய்ப்புக்களை வழங்கும் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பட்டதாரிகள் மற்றும் பலருக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
27 minute ago
1 hours ago