Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையில் தடைப்பட்டிருந்த ரயில் சேவைகளானது இன்று காலை முதல் வழமைக்குத் திரும்பியதாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களின் அதிபர்கள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (03), மட்டக்களப்பு மாவட்டத்துக்குள்; நுழைய முடியாதவாறு பொலன்னறுவை -மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் வழிமறிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர், மட்டக்களப்பு -கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவையை அசேலபுரவுக்கும் ரிதீதென்னவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தடைப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட ரயிலே இவ்வாறு தடைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வாழைச்சேனையிலிருந்து கொழும்பு நோக்கிச் சனிக்கிழமை (03) முற்பகல் 11.35 மணிக்குப் புறப்பட்ட ரயில், பாதுகாப்புக் கருதி புணானை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
கலகம் அடக்கும் பொலிஸாரும் படையினரும் வழித்துணை வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்ததன் காரணமாக தடுத்துநிறுத்தப்பட்ட ரயில்; சனிக்கிழமை இரவு 6.15 மணியளவில் புணானையிலிருந்து விடுவித்துக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
கொழும்பிலிருந்து வந்த அந்த ரயில், வழமையான நேர அட்டவணைப்படி பிற்பகல் 03 மணிக்கு மட்டக்களப்பை அடைந்திருக்க வேண்டும். ஆயினும், சனிக்கிழமை இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 05 மணித்தியாலங்கள் தாமதித்து இரவு 08 மணிக்கே மட்டக்களப்பை வந்தடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago