2025 மே 07, புதன்கிழமை

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் சாதனை

Niroshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

தாய்லாந்தில் கடந்த வாரம் நடைபெற்ற 2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியா போட்டியில், கணித பிரிவில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனான துரைராசசிங்கம் இமயவன் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார்.

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தரம் 06 தொடக்கம் 08 வரையான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சர்வதேச போட்டியில் கலந்துகொண்டுள்ள மாணவர்களில் ஒரே ஒரு தமிழ் மாணவன் இவர் என்பதுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரான கி.துரைராசசிங்கத்தின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கணித பிரிவு மாணவர்கள் 06 வெண்கலப் பதக்கங்களும் 03 வெள்ளிப் பதக்கங்களும், 01 தங்கப்பதங்கமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X