Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 08 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மூவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், கல்குடாத்தொகுதியில் வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த கே.ஜெபகுமார் 2,304 வாக்குகளையும் மட்டக்களப்புத் தொகுதியில் கோட்டைமுனையைச் சேர்ந்த எட்வேர்ட் ஜெயராசா பயஸ்ராஜ் 1,574 வாக்குகளையும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் களுதாவளையைச் சேர்ந்த பி. வதீஸ்குமார் 431 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், கல்குடாத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -6,532, அளிக்கப்பட்ட வாக்குகள் -4,061 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -28, செல்லுபடியான வாக்குகள் -4,037 வாக்களிப்பு வீதம் 62.17.
மட்டக்களப்புத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -6,817, அளிக்கப்பட்ட வாக்குகள் -3,259, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -18, செல்லுபடியான வாக்குகள் -3,241, வாக்களிப்பு வீதம் 47.8
பட்டிருப்புத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -5,051, அளிக்கப்பட்ட வாக்குகள் -1,209, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -11, செல்லுபடியான வாக்குகள் -1,198, வாக்களிப்பு வீதம் 23.93
நாடளாவிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 46.35 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
55 minute ago
1 hours ago