2025 மே 26, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் ஐ.தே.கவின் 42 கிளைகள்

Suganthini Ratnam   / 2017 மே 11 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 42 கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன், இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தில்; தமிழ்ப் பிரதேசங்களில் இதுவரைகாலமும் ஐக்கிய தேசியக் கட்சியை  யாரும் வளர்க்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான் நியமிக்கப்பட்டதை அடுத்து,  ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை கிராமங்கள் தோறும் நான் முன்னெடுத்து வருகின்றேன்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஐக்கிய தேசியக் கட்சியின் 42 கிளைகளை இதுவரையில் உருவாக்கியுள்ளேன்.  

அதேபோன்று, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகள் தோறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைகளை உருவாக்குவதுடன், தற்போது பிரதேச மட்டத்திலுள்ள கிளைகளை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X