2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் டெங்குவால் 4 பேர் உயிரிழப்பு: 1,576 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

டெங்குக் காய்ச்சல் காரணமாக  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்  மட்டக்களப்பில் 4 பேர்   உயிரிழந்துள்ளதுடன், 1,576 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயாளர்கள்  சுமார்; 750 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 501 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டின்  ஆரம்பத்தில் அதிகளவான  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.  

நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்கும் வகையில் வகையில் சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருக்க  வேண்டும் எனத் தெரிவித்த அவர், டெங்குக் காய்ச்சலின் தாக்கம் மேலும் ஓரிரு மாதங்களுக்கு நீடிக்குமாயின் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .