2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவு தினம் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று புதன்கிழமை மாலை சத்துருக்கொண்டான்,பனிச்சையடியில் உள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத் தூபி அருகில் அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னதாக பனிச்சையடி கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றும் நடப்பட்டது.அதனைத்தொடர்ந்து, பனிச்சையடி தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,எஸ்.வியாளேந்திரன் அ.கோடிஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.துரைரெட்னம்,மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.சௌந்தரராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X