2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 889 பேர் ஆலோசனைகள் முன்வைப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறும் நல்லிணக்கப் பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியிடம்; மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 889 பேர் ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளதாக அச்செயலணியின் மட்டக்களப்பு மாவட்டக் குழுச் செயலாளர் ஏ.காண்டீபன் தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 09ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரை நடைபெற்றது.

வாழைச்சேனை,  களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, வாகரை, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகங்களில் இதன் அமர்வுகள் நடைபெற்றன.

வாழைச்சேனையில் 278 பேரும் களுவாஞ்சிக்குடியில் 77 பேரும்  மட்டக்களப்பில் 209 பேரும்  வாகரையில் 90 பேரும் பட்டிப்பளையில் 235 பேரும் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும்  முன்வைத்துள்ளனர்.

இந்த ஆலோசனைகளிலும் கருத்துகளிலும் அதிகமானவை காணாமல் போனோர் சம்பந்தப்பட்ட விடயங்களாக உள்ளன. இதற்கு அடுத்ததாக  காணிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளன.  மூன்றாவது இடத்தில் இனப்படுகொலை பற்றிய விடயங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X