2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 26 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ரஹ்மான், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வருடத்தில்; நுளம்புப்பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.  

இந்த மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தைக்  குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளொன்றுக்கு 100 வீட்டு வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. வீட்டுப்பீலிகள், கிணறுகள் உள்ளிட்டவற்றில்; நுளம்புப்பெருக்கம் காணப்படுகின்றது. அத்துடன், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சிலர் பின்பற்றாத நிலைமை உள்ளது.

மேலும், நகர்ப்பகுதிகளிலுள்ள சில வீடுகள் பூட்டப்பட்டுள்ளமையினால், அவற்றில் சோதனை மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளதுடன், நுளம்புப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைமையும் உள்ளது.

கடந்த காலத்தில் நுளம்புப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கிணறுகளில் மீன்குஞ்சுகளை விடும் நடவடிக்கையை சுகாதாரத் திணைக்களம் மேற்கொண்டிருந்தது. இந்த நடவடிக்கையை சுகாதாரத் திணைக்களத்தினால் மட்டும் செய்ய முடியாது. பொதுமக்கள், உள்ளூராட்சி சபைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X