Kogilavani / 2017 பெப்ரவரி 20 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பில்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
குறித்த செயற்பாடு ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி, பிரதியமைச்சர் அமீர்அலி ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிழக்கு மாகாணத்ததில் களுதாவளைப்பிரதேசம் அதிகளவான விவசாய உற்பத்தியாளர்களைக் கொண்ட பிரதேசமாக உள்ள காரணத்தினால், இந்த பொருளாதார மத்திய நிலையத்தினால் அப்பிரதேச விவசாய உற்பத்தியாளர்களுக்கும் பெரும் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கும் நிலையமாக செயற்படவுள்ளது.
வடக்கு மாகாணத்திலும் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அது இழுபறியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
34 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
6 hours ago