2025 மே 12, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 24,948 வீடுகளில் மின்சார வசதியில்லை

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24,948 குடும்பங்கள் மின்சார வசதியற்று இருப்பதாக கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மேலும், இம்மாவட்டத்தில்  2,466 வீடுகள் மின்விநியோக மார்க்கங்கள் அற்ற இடங்களில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, 22,482 வீடுகள் மின்விநியோகம் உள்ள பகுதிகளில் இருந்தபோதும், வறுமை காரணமாக அவ்வீட்டிலுள்ளவர்கள் மின் இணைப்பைப் பெறவில்லை.

ஆகக் கூடுதலாக வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 4,270 குடும்பங்களும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4,157 குடும்பங்களும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 3,432 குடும்பங்களும் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 3,039 குடும்பங்களும் வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 2,562 குடும்பங்களும் மின்சார வசதியற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.   

இக்குடும்பங்கள் மண்ணெண்ணெய்  விளக்குகளை நம்பியே காலங்கழிக்கின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X