Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கொவிட்-19 பீதியின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் முடங்கியிருக்கின்ற இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய விளைபொருள்களை விற்பனை செய்ய
முடியதா நிலைக்கு மாவட்ட விவாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் களுதாவளையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் இதுவரையில் திறக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனைக்
கருத்தில் கொண்டு, மாவட்ட விவசாயிகளின் விளைபொருள்களை தகுந்த முறையில் தற்போதைய காலகட்டத்தில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்
நோக்குடன் குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் தலைமையில்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் மற்றும் விவசாய அமைப்புக்கள், விவசாயிகளின் ஒத்துழைப்புடன்
இன்று செவ்வாய்கிழமை (14) காலை 07.00 மணியளவில் திறந்து வைக்ககப்பட்டு அப்பகுதி விவசாயிகளின் விளைபொருள்களை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தமது விளை பொருள்களை விற்பனை செய்யவும்,
வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியாதிருந்த இந்த இக்கட்டான காலகட்டத்தில் தமது கிராமத்தில் அமைந்தள்ள விசேட பொருளாதார நிலையத்தை திறந்து வைத்து தமது விளைபொருள்களை அரசாங்கம் கொள்வனவு செய்வதானது
தமக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இச்செயற்பாடு தொடர்ந்து இடம்பெற வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கத்தரிக்காய் (ஊதா) ஒருகிலோ 90 ரூபாவுக்கும், கத்தரிக்காய்
(வெள்ளை) ஒரு கிலோ 75 ரூபாவுக்கும், வெண்டி ஒரு கிலோ 30 ரூபாவுக்கும், மிளகாய் பி.சி 1 ஒருகிலோ 120 ரூபாவுக்கும், பயற்றை ஒருகிலோ 30 ரூபாவுக்கும், பாகற்காய்
ஒருகிலோ 70 ரூபாவுக்கும், நாடங்காய் ஒரு கிலோ 30 ரூபாவுக்கும், பீற்றூட் ஒரு கிலோ 80 ரூபாவுக்கும், இதன்போது அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது.
இப்பிரதேசத்தில் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிகமாகவுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் விளை பொருள்களை
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினூடாக அவற்றைக் கொள்வனவு செய்துள்ளோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
31 minute ago
51 minute ago
1 hours ago