2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு போராட்டம்

Freelancer   / 2023 மார்ச் 15 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

வரிவிதிப்பு, பொருட்களின் விலையேற்றம் உட்பட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அநீதியான அரசாங்கத்தின் அசாதாரணமான வரிவிதிப்புக்கொள்கை மற்றும் மக்களை அழுத்தத்திற்குள்ளாக்கும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் எனும் தொனியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு சுமார் 60க்கு மேற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இவ்எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கத்தின் தலைவர் தில்லைநாதன் சதானந்தன்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்தப் போராட்டமானது அநியாயமான வரி விதிப்பு மாத்திரம் அல்ல எங்கள் மீதும் நமது மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத்தான் இன்று நாங்கள் இறங்கியுள்ளோம்.

பொய் பிரச்சாரத்தை தற்பொழுது அரசாங்கம் தொடங்கி வைத்துள்ளது இந்த வரி வசூலிப்பும் தற்போது டொலர் மதிப்பு தங்களுடைய நடவடிக்கைகளினால் இப்பொழுது ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ளதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எங்களுக்கு தெரியும் எதுவிதமான விலைகளும் விதவிதமான குறைவும் ஏற்படவில்லை எங்களுக்கு விலை மதிப்பீடு இன்னமும் உயர்வும் மின்சார கட்டண உயர்வு நீர் கட்டணம் மட்டுமல்ல தற்பொழுது எங்களுடைய எரிபொருள் கட்டணங்கள் கூட உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

எங்களுடைய இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் அவர்கள் ஆட்சி பீடத்தில் இருந்து கொண்டு எங்களுடைய பணத்தை சுரண்டிக்கொண்டு என்ன செய்கின்றார்கள் என்று தெரியாத வெளிப்படை தன்மையற்றதாக காணப்படுகின்றது.

இந்தப் போராட்டமானது எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரைக்கும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும்.

இன்று இலங்கையில் உள்ள 41க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டை முடக்குமுறை நாளாகவே இன்று காட்டவெளிபட்டுள்ளது இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்தே இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என விரிவுரையாளர்கள் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .