2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 43,387 பேர் பாதிப்பு

Editorial   / 2021 ஜனவரி 05 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 13,001 குடும்பங்களைச் சேர்ந்த 43,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மழை வெள்ளம் காரணமாக காத்தான்குடி பிரதேசம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

காத்தான்குடி மக்கள், வீடுகளை விட்டு வெளியேறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவுத் அம்மக்களுக்கு அனர்த்த முகாமைத்து நிலையம் ஊடாக நிவாரணம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .