Princiya Dixci / 2020 நவம்பர் 18 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி, க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பில் 2020-21ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் கிரமமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாய நிலங்களில் 60 ஆயிரத்தி 87.5 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான 16 ஆயிரத்தி 878 மெற்றிக் தொன் மானிய உரம் 20 ஆயிரத்தி 975 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகின்ற நிலையிலும் அப்பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திங்களை அரசும் விவசாய அமைச்சும் முன்னெடுத்து வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் நிலையத்தால் சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகான உரங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் யூரியா, ரீ.எஸ்.பீ மற்றும் எம்.ஓ.பீ ஆகிய உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago