2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் ஊரடங்கை மீறிய 12 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  பிரதேசங்களில் ஊரங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 12 பேரை, நேற்று (01) கைது செய்துள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை வரவழைத்து, மே மாதம் 13ஆம் திகதி  நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, பொலிஸ் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X