Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 மே 07 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன் வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏப்ரல் 27ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 01ஆம் திகதி வரையான 05 நாள்களில் 27 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரென, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.
எனினும், மட்டக்களப்பில் கடந்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த வாரம் டெங்குத் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 14 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“அதுபோன்று, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேர், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேர், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேர், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேர், வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
“இருப்பினும், வெல்லாவெளி, பட்டிப்பளை, கோரளைப்பற்று மத்தி, கிரான், வவுனதீவு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
2 hours ago
3 hours ago