2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 மார்ச் 17 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்துனில் ரணவீர தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகலொன்றையடுத்து, குறித்த பிரதேசத்தில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களிடமிருந்து சொட்கண் துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளனவென, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர் தெரிவித்தார்.

குறித்த நபர்கள், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனரெனத் தெரிவித்த ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X