2026 மார்ச் 07, சனிக்கிழமை

மட்டக்களப்பில் பொலிஸாருக்கு பிசிஆர் பரிசோதனை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு பொலிஸ்  நிலைய உத்தியோகத்தர்கள் 50 பேருக்கு, மட்டக்களப்பு பொலிஸ் விடுதியில் வைத்து இன்று (26) பிசிஆர் பிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ்  பரம்பலைக்  கட்டுப்படுத்தும்  வகையில்,  சுகாதார  வைத்திய அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் அரச அலுவலகங்கள், திணைக்களங்களில் பணிபுரியும்  உத்தியோகத்தர்களில் நேரடியாக பொதுமக்களுடன் கடமை நிமித்தம் தொடர்புடையவர்களுக்கு பிசிஆர் பிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய,  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பொலிஸ்  பிரிவு பொறுப்பதிகாரி ஜி .உதயகுமார் ஏற்பாட்டில், மட்டக்களப்பு தலைமையக  பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி பி. கே ஹெட்டிஹாராச்சி  தலைமையில், மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக  வைத்தியர் கிரிசுதன்  தலைமையிலான  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  குழுவினால், மேற்படி பிசிஆர் பிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .