Janu / 2023 ஜூன் 01 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இலங்கை வங்கியை உடைத்து கொள்ளையிடும் பாரிய முயற்சி வங்கி முகாமையாளரின் துரித நடவடிக்கையாலும் சமயோசித செயற்பாட்டினாலும் தடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் குறித்த வங்கியை உடைத்து வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள் பிரதான பாதுகாப்பு பெட்டகம்(லொக்கர்) வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து உள்ளே நுழைந்து லொக்கரை உடைக்க முயற்சித்த போது வங்கியின் முகாமையாளர் லொக்கரின் கைப்பிடியில் தனது தொலைபேசி இலக்கத்தை இணைப்புச் செய்திருந்தமையால் லொக்கரைத் தொட்டவுடன் வீட்டிலிருந்த தனது தொலைபேசியில் எச்சரிக்கை மணி ஒலிக்க துரித மாகச் செயற்பட்ட முகாமைளாளர் உடனடியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாரை அழைத்துக் கொண்டு வங்கிக்கு வந்தபோது கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.
ஸ்லத்திற்கு விரைந்த தடையவியல் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைனககளை மேற்கொண்டுள்ளனர். வங்கியின் சில பகுதிகள் உடைத்து சேதப்படுத்தப்hட்டுள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



29 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago