2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு செயலாளரை நியமிப்பதில் இழுத்தடிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மட்டக்களப்பு மாவட்டத்குக்கு நிரந்தர செயலாளர் ஒருவரை நியமிப்பதில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்கின்றது” என, சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஏ.எல்.மீராசாகிப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே,  மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

“திருகோணமலை மாவட்ட செயலாளர் இந்த மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இப்பதவிக்கு நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும்.

“மட்டக்களப்பு மாவட்டம் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.

“இந்நிலையில் பல நாட்கள் கடந்தும் இன்னும் ஒரு நிரந்தர செயலாளர் நியமிக்கப்படாதது குறித்து அரசாங்கத்தின் மீது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

“இந்த மாவட்டத்தில் செயலாளரால் ஆற்றப்பட வேண்டிய பல்வேறு கடமைகளும் பொறுப்புக்களுமுள்ள நிலையில், செயலாளர் ஒருவரை நியமிப்பதில் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்யக் கூடாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X