Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிளவு, கிழக்கில் தமிழர்களின் இருப்பை நிச்சயம் கேள்விக் குறியாக்கும். எனவே, இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால், அதற்கு எதிராக மக்களைத் தூண்டி, இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் எனச் செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே. மோகான் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கலடியிலுள்ள தமிழ் உணர்வாளர் அமைப்பின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுறியதாவது:
உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரிந்து நின்று தேர்தல் களத்தில் குதித்திருப்பது, வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசியத்தை விரும்புகின்ற அனைவருக்கும் ஒரு பெரும் அதிர்ச்சியான செய்தியாக இருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரிந்து நின்று தேர்தல் களத்தில் குதிக்குமாக இருந்தால், யாரும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க கூடாது என, நாங்கள் இவர்களுக்கு எதிராக மக்களை திசை திருப்புவோம்.
இந்தப் பிளவுகூட காலப்போக்கில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். தமிழ்த் தேசிய நீரோட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எந்தப் பங்களிப்பும் இல்லாமல், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு அமையாது. எனவே, வடகிழக்கு தமிழர்களின் நன்மைகருதி, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கின்றது. எனவே, அவசரமாகவும் அவசியமாகவும் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் முடிவை எடுக்க வேண்டியது, எங்களது நிலைப்பாடு என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago