2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு பொலிஸாருக்கு தொற்றில்லை

Princiya Dixci   / 2021 ஜனவரி 07 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில்லை என மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர்  எஸ்.கிரிசுதன் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றுகின்ற 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இப்பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X