Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 01 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே பிரதேச செயலகத்தில் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்த பிரதேச செயலாளர்கள் அனைவரையும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறித்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இவ் இடமாற்றத்தின் பிரகாரம், வாகரையில் கடமையாற்றிய எஸ்.ஆர்.ராகுலநாயகி, வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கும் வெல்லாவெளியில் கடமையாற்றிய எஸ். வில்வரெட்ணம், செங்கலடி பிரதேச செயலகத்துக்கும், செங்கலடியில் கடமையாற்றிய உ.உதயசிறிதர், காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கும் , வவுணதீவில் கடமையாற்றிய எஸ். ராஜ்பாவு, கிரான் பிரதேச செயலகத்துக்கும் ,கிரான் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய எஸ்.தனபாலசுந்தரம், வாகரை பிரதேச செயலகத்துக்கும், காத்தான்குடியில் கடமையாற்றிய எஸ்.எச்.முசமில், கோறளைப்பற்று மத்திக்கும், கோறளைப்பற்று மத்தியில் இருந்த ற.நிகாரா, ஓட்டமாவடிக்கும் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.
இதேநேரம், ஏற்கெனவே விசாரணை எனக் கூறி கொழும்புக்கு அழைக்கப்பட்ட வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்கள் எந்தவித குற்றமற்றவர்கள் எனவும் அவர்கள் அமைச்சின் தேவை கருதியே, கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகக் கூறி, அவர்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறித்த இடமாற்றத்தில் இணைத்து மீண்டும் மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
51 minute ago
2 hours ago
5 hours ago