Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 01 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம், மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று(01) நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்ம் நடைபெற்றது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான கே.துரைராஜ சிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதன், த.தே.கூ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வரசா, பி.அரிய நேந்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரணம் (ஜனா), எம்.நடராஜா உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 11 உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago