2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களுக்கு 4 நாட்களுக்கு பூட்டு

Princiya Dixci   / 2021 ஜனவரி 10 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு அத்தியாவசிய விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களைப் பூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 25 பாடசாலைகளை தவிர, மாகாணத்திலுள்ள ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை (11) திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  

மாவட்டச் செயலாளகத்தில் இன்று (10) நடைபெற்ற மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்படட தீர்மானங்கள் தொடர்பாக  ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் வாரம் தைப்பொங்கல் வாரமாக இருப்பதால், கடைகளில் பொதுமக்கள் கூடுமிடத்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக, அவர் சுட்டிக்காட்டினார். 

இதனடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமையில் இருந்து எதிர்வரும் வியாழக்கிழமை வரை அத்தியாவசியத் தேவைகளான மருந்தகம், சில்லறை விற்பனை நிலையங்கள், பொதுச் சந்தைகள், உணவகங்கள், பேக்கரி தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாகவும் உணவகங்களில் இருந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், எடுத்துச் செல்ல மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X