2025 மே 09, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்புக்கு மஹிந்த, பசில் நாளை விஜயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவுத் தெரிவித்து,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாளை (26) விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், பிரசாரப் பணிகளிலும் ஈடுபடவுள்ளனர் என்று, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் தலைமையில், வாழைச்சேனை இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில்,  பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில்,  மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில்,  சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள், பிரமுகர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X