2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மட்டு. குளங்களின் வான்கதவுகள் திறப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, வ.திவாகரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக ஏற்படும் வெள்ள நீர் அபாயத்தைக் குறைப்பதற்கு வசதியாக குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, மித மிஞ்சிய நீர் கடலுக்குள் பாய விடப்படுவதாக,  மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம். அஸ்ஹர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களான உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மட்டக்களப்பை ஊடறுத்துச் செல்லும்  புளுகுணாவைக் குளத்தின் வான் கதவும் திறந்து விடப்பட்டுள்ளது.

புளுகுணாவைக் குளத்தின் நீர்மட்டம் 29 அடிக்கு மேல் உள்ளதாலும், தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருப்பதாலும் இந்தக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் வானிலை சீரடையாமல் இருப்பதால், மாவட்ட இடர் முகாமைத்துவ அலுவலர்களும் நீர்ப்பாசனத் திணைக்களம், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளும் அனர்த்தத் தடுப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் ஆகியோரும் கண்காணிப்புத் தயார் நிலைக் கடமைகளில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X