2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மட்டு. சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கௌரவுப்பு

Freelancer   / 2023 மார்ச் 13 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தேசிய ரீதியில் வரலாற்று சாதனையை முதல்தடவையாக  பெற்றுக்கொடுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பில் நேற்று (12) நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந.பிரபாகரன் தலைமையில், மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வின் சிறப்பு அதிதியாக தேசிய பயிற்றுவிப்பாளரும், சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிப்பாளரும், இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியருமான வே.திருச்செல்வம் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர், கல்முனை சிறைக்கூடத்தின் நிர்வாக உத்தியோத்தர் உள்ளிட்ட மட்டக்களப்பு சிறைச்சாலையின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

தேசிய ரீதியில் சாதனையை நிலைநாட்டிய வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ், பணப்பரிசு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இச்சாதனைiய படைப்பதற்கான பயிற்சியை வழங்கிய பயிற்றுவிப்பாளர் வே.திருச்செல்வம், சிறைச்சாலை அத்தியட்சகரால் கௌரமளிக்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக ந.பிரபாகரன் கடமைப் பொறுப்பேற்றதன் பிற்பாடு, தொடர்ச்சியாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பல்வேறு துறைகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

குறிப்பாக விளையாட்டு துறையில் தேசிய சாதனைகளை நிலைநாட்டிவரும் நிலையில், அண்மையில் இடம்பெற்ற இலங்கை சிறைச்சாலைகளுக்கிடையிலான மல்யுத்த போட்டிகளில் 9 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 15 பதக்கங்களைப் பெற்று, தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சம்பியனாகத் தெரிவாகியுள்ளனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .