Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் 100 பேரிடம் இன்று (30) காலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் கொரோனா பரிசோதனையின் போது ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென, கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் பி.கிரிசுதன் தலமையில் நடைபெற்ற மேற்படி பரிசோதனையில், மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எம்.குணரத்தினம் உட்பட பொது சுகாதார பரிசோதகர்களும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டிருந்தனர்.
பிசிஆர் பிரிசோதனைக்கு ஒப்பாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள், சுமார் 20 நிமிடங்களில் பெறலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய, சிறைக்கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகள் 20 நிமிடங்களில் வெளயிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Dec 2025
17 Dec 2025