Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை வரைபில் சமூக மட்டத்தில் முன்மொழிவுகள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வரையை தயாரிப்பதற்கான வரியிறுப்பாளர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடல், மாநகர மேயரும் நிதிக்குழுவின் தலைவருமான தியாகராஜா சரவணபவன் தலைமையில், மாநகர சபை நகர மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்றது.
நடைமுறையில் உள்ள நிதி நிலை அறிக்கை மூலமாக நிறைவுறுத்தப்பட்டுள்ள வேலைகள் , நிலுவை வேலைகள் தொடர்பிலும், கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக எதிர்பார்த்த வருமான இழப்புகள் தொடர்பிலும் மாநகர மேயரால் சபையோருக்கு இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், 2021ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அடுத்த ஆண்டுக்கான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி ஹெலன் சிவராஜா, மாநகர நிதி நிலையியற்குழுவின் அங்கத்தவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025