Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 05 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிகமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் தரித்திருப்பதற்கான தற்காலிக கூடாரங்களை மேலும் அதிகரித்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக, மாவட்டச் செயலாளரிடம் அவ்வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்ததாவது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன் வீதி ஒருவழிப் பாதையாக இருந்த போதும் அதிகளவான சன நெரிசல் காணப்படுகின்றதாகவும் இதனை நிவர்த்திக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலங்களில் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுமாயின் அதற்கான முன்னாய்த்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வைத்தியசாலைக்கு பணிக்கு வருகின்ற வெளிமாவட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரத்தியேக பஸ் சேவையை ஏற்படுத்திக்கொள்வதற்கும் இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை இணக்கம் தெரிவித்ததாகவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago