Princiya Dixci / 2021 ஜனவரி 06 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய இருதயவியல் பிரிவு ஆய்வகத்துக்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் உள்ள குறைபாடுகளை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவுக்கான உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அமைச்சருக்கு, பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரு கிழமைகளில் கிடைக்க இருந்த வைத்திய உபகரணங்களை இடைநிறுத்தி, அவற்றை களுத்துறை மாவட்டத்துக்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன் எம்.பி, “கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இந்த உபகரணம் இல்லாமையால் பல வருடங்களாக மக்கள் உரிய நேரத்துக்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம்.
“இந்தப் பிரச்சினை இனி முடிவுக்குக் கொண்டுவரப்படும். எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025