2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மட்டு. மாநகரசபையின் 14ஆவது மாதாந்த பொது அமர்வு

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாநகரசபையின் 14ஆவது அமர்வு, மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில், மாநகரசபை மண்டபத்தில், நாளை (04) காலை 9.30  மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களின் பல முக்கிய விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளனவென, மேயர் தெரிவித்தார்.

ஓட்டோக்களை முறையாகப் பதிவு செய்தல், ஓட்டோ சாரதிகளின் சேவையை விஸ்தரித்தல் சம்பந்தமான பிரேரணை, மாநகரசபை எல்லைக்குள் காணப்பட்ட 5 வாசிப்பு நிலையங்களைத் தரம் IIIக்கு தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளனவென, மேயர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X