2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 2,650 பேருக்கு டெங்கு

Princiya Dixci   / 2020 நவம்பர் 04 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 2,650 பேர் டெங்குத் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பிராந்திய தொற்றியியலாளர் டொக்டர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் டெங்கின் தாக்கமும் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது மழையுடன் கூடிய வானிலை ஆரம்பமாகியுள்ள நிலையில், டெங்குத் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதெனத் தெரிவித்த டொக்டர் குணராஜசேகரம், ஒக்டோபர் மாதம் மாத்திர் ஓட்டாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 164 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றார். 

பொதுமக்கள் தமது வீடுகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமே டெங்கின் தாக்கத்தைக் குறைக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .