Princiya Dixci / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீதிகள், தாழ் நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்று (22) காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலங்களில் இம்மாவட்டத்தில் 341 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
புதிய காத்தான்குடி, நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, கிரான் உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் நீர் தேங்கியுள்ளால் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago