2026 மார்ச் 07, சனிக்கிழமை

மட்டு. முதல்வரைச் சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவிட்ரு தொதிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு நேற்று மாலை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவிட்ரு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனைச் சந்தித்த பிரான்ஸ் தூதுவர், மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

 மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் தேவைப்பாடுகள், மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் தூதுவருக்கு மாநகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது.

 தொழில்வாய்ப்பற்ற இளைஞர் ,யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலான தொழில்பேட்டைகளை அமைப்பதற்கான முதலீட்டாளர்களை இங்கு அழைப்பது தொடர்பிலும் தூதுவருடன் முதல்வர் கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .