2025 மே 07, புதன்கிழமை

மணல் அகழ்வு : ‘புதிய பொறிமுறை விரைவில் அமுலாகும்’

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, வ.சக்தி  

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், இன்று (25) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வரவேற்பு உரையுடன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், விசேடமாக மணல் அகழ்வு தொர்பாக தற்காலிமாக மணல் அகழ்வை இடைநிறுத்த வேண்டும் என்று கடந்த மாதம் அபிவிருத்தக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயம் நடைமுறைக்கு கொண்டுவர முடியாமை குறித்து ஆராயப்பட்டன.

இதில் பிரதேச சபையின் தவிசாளர்கள், தங்களின் அனுமதியின்றி, தங்களுடைய வீதிகளை மணல் லொறிகள் பாவிப்பதால் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகள் முழுமையாக சேதம் ஆக்கப்பட்டு வருவது குறித்து கவனம் செலுலுத்தப்பட்டது.

இப்பாதைகளைப் புனரமைப்பதற்கு பிரதேச சபையின் நிதி இன்மை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கும்படி பிரதேச சபைத் தவிசாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், “அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையில் பிரதேசவாசிகளுக்கான அதிகளவான வாய்ப்பையும் மிகுதியை வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்றவர்களுக்கு மணல் அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதெனவும் இந்நடைமுறையை இரு வாரங்களுக்குள் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X